Monday, April 6, 2009

லட்சிய திராவிடமுன்னேற்ற கழகம் ..நம்ம டி ஆர் கட்சி

இது ஒரு மொக்கை பதிவு. மொக்கையிய் மொக்கையாக பார்க்கவும்.

தேர்தல் கலை கட்டுது. எல்லா கட்சியும் கொள்கை என்பதை கழிவறையில் கொட்டி விட்டு தண்ணி ஊற்றாமல் கூட்டணி அமைத்து விட்டார்கள். மீதி இருப்பது நம்ம டி.ஆர் கட்சி தான். அவரோட கட்சி நிலவரம் என்ன என்று பார்ப்போம்.

ரெண்டு நாள் முன்னாடி டி.ஆர், சோனியாவுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த பிறகு , டி.ஆர் பி.பி.சீக்கு அளித்த பேட்டியில்,
--------------------------------------------------------------------------
கொஞ்ச நேரம் முன்னாடி தொலைபேசியில் பேசிய ஒபாமா என்னைய முதலைமச்சர் சாரி பிரதமர் ஆகனும்னு காலில் விழாத குறையாக கேட்டு கொண்டார். அப்பிடி ஆகவில்லை என்றால், அவர் அமெரிக்கா அதிபர் பதவியில் இருந்து விலகுகிறேன் என்று சமிபத்தில் நடந்த ஜி-ட்வென்டி மாநாட்டில் முழக்கமிட்டுள்ளார். என்னோட அருமை அமெரிக்காவிற்கு புரியுது ஆனால் இத்தாலிக்கு புரியல.

நான் என்ன சோனியா சோனியா சொக்க வைக்கிற சோனியா என்றா பாடினேன், இல்லையே நான் அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே என்று தானே பாடினேன் (தமிழ்நாட்டு அம்மா இல்ல, இந்தியா அம்மா). பிறகு ஏன் என் வாரிசு குறலரசன்னுக்கு நிதி துறை மந்திரி தர மாட்டேன் என்கிறார் சோனியா , தேர்தலில் வின் பண்ணின பிறகு (அடாக் கோய்யல, தேர்தல இனும் ஆரம்பிக்கல அதுக்குள்ள மந்திரியா). இது ப.சிதம்பரம் பண்ணின சதி வேலை தான்.

என்னைய லல்லு கூப்பிட்டாரு , மாயவதி கூப்டாங்க, பவுடர் பேபி தயாநதி மாறன் ஒத்தைக்கு ஒத்தை வரியான்னு கூப்பிடர்ர்று , ஜெயபிரத அவங்க கன்னத்தில் பல்லான்குழி விளையாட கூப்டாங்க, முருகதாஸ் ஹிந்தி கஜினியில் நடிக்க கூப்பிட்டாரு, ரித்தேஷ் கானல்நீர் படத்துல என்னைய டூப் போட கூபிட்டார்று, இவங்கள எல்லாம் விட்டுட்டு சொனியவோட பேச்சுவர்த்தைக்கு போனது தப்பா போச்சு.
----------------------------------------------------------------------------

இதை அடுத்து தென்மேற்கு பருவ காற்று தேனி பக்கம் வீசுவது போல அத்வானி காற்று நம்ம டி.ஆர் பக்கம் வீசுகிறது. வழக்கம் போல அத்வானி உடன் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிய, டி.ஆர் பி.பி.சீயிடம்,

-------------------------------------------------------------------------------

நிருபர் : அத்வானி உடன் பேச்சுவார்த்தை எப்படி போச்சு?

டி.ஆர்: நான் அவர் ரூமில் நூளைந்த உடனே, எனக்கு குருவி ரொட்டி கொடுத்து வரவேற்பு அளித்து எனக்கு மகிழ்ச்சி அளித்தது. நான் அவரிடம் சொன்னேன், நீங்கள் இன்னும் ஒரு ரதயாத்திரை நடத்தினால் நான் சக்கரமாக இருப்பேன் என்று.

நிருபர்: வேற என்ன பேசினீர்கள்?

டி.ஆர்: நான் அத்வானி கிட்ட எனக்கு கட்டிடம் உடைப்பதில் முன் அனுபவம் இருப்பதாக சொன்னேன். மற்றும் எனக்கு சொந்தமாக ரெண்டு புல்டோவ்செர் இருப்பதாக சொன்ன உடனே அவர் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்ல.
ஏற்கனவே என்னோட வாரிசு சொம்பு சி.இ.டி நகர் பையன்களிடம் மூக்கு உடை பட்டது உங்கள்ளுக்கு யாபகம் இருக்கும் என்று ந்ம்புகிறேன்.

நிருபர்: இவ்வளவு நனறாக பேச்சுவார்த்தை நடந்தும், ஏன் பி.ஜெ.பிஇடம் கூட்டணி அமையவில்லை.

டி.ஆர்: நான் பூங்கா நகர் தொகுதியை இந்தியாவில் இருந்து பிரித்து தனி நாடாக மாற்றி அதில் என்னை பிரதமராக்க வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர் பார்கூரை வேண்டும் என்றால் தனி நாடாக மாற்றி தருகிறேன் என்று சொன்னார். அதற்கு நான் ஒப்பு கொள்ளவில்லை. அதனால் தான் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
-------------------------------------------------------------------------------------

பேட்டி முடிந்து டி.ஆர் வெளியே வர, கார்த்திக்கும், சரத்குமாரும் அவரை வரவேற்க மாலையுடன் நின்று கொண்டு இருந்தனர்.