Friday, March 20, 2009

வணக்கம். முதல் பதிவு . இது தான் சென்னை

எல்லாருக்கும் வ்ணக்கம். இது அடியேனின் முதல் பதிவு. எனக்கு தமிழ் தட்டச்சு புதிது . அதனால் பிழை இருந்தால் கொஞ்சம் மன்னித்து அருளும் படி வேண்டுகிறேன்.

என் சொந்த ஊர் படந்தால் என்ற கிராமம், சாத்தூர்க்கு அருகில். கடந்த நாலு வருடங்களாக குப்பை கொட்டுவது சிங்கார சென்னையில்.

நம்ம பயலுக சொல்லுவாங்க, சென்னையில் எதிர் வீட்டுல இருக்கறவங்க பேரு கூட தெரியாம மக்கள் வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க அப்பிடின்னு. கிராமத்தான் என்னைய மாதிரி ஆளுங்களும் இப்ப இந்த மாதிரி மாறிட்டு இருக்காங்க [நான் உட்பட]. சமீபத்தில் நான் சந்தித்த நிகழ்வு என் மனதை மிகவும் பாதித்து விட்டது.

நான் தங்கி இருப்பது கே.கே நகரில் உள்ள ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தில்.அன்று சண்டே, வழக்கம் போல நாயரிடம் வம்பு வளர்த்து விட்டு, மதிய சாப்பாட்டுக்கு அசைவம் வாங்கி விட்டு வந்து கொண்டு இருந்தேன். அப்போது பக்கத்து வீட்டில் மாதவன் படம் ஓடி கொண்டு இருந்தது. நானும் நண்பர்களும் நன்றாக சாப்பிட்டு விட்டு ஜோடி நம்பர் ஒன் விஜய் டிவ்யில் பார்த்து கொண்டு இருந்தோம். நணபன் பாண்டி வழக்கம் போல கே தொல்லைகாட்சியில் வானத்தை போல திரைப்படம் பார்க்க வேண்டும் என்றான். சரி என்று வேறு வழி இல்லாமல் நானும் பார்த்து கொண்டு இருந்தேன். உண்டா களைப்பில் நனறாக உறங்கி விட்டேன். மணி ஆறு, எழுந்து நாயர் கடையில் டி குடிக்கலாம் என்று கிளம்பினேன்.

பக்கத்து வீட்டில் பெரிய கூட்டம். என்னடா ஆச்சு மதியம் ஒன்னும் இல்லையே, இப்ப என்னாச்சு என்று பார்த்தேன். பார்த்தால் பக்கத்து வீட்டு பாட்டி பிணமாய் கிடத்த பட்டு இருந்தார்கள்.
பக்கத்து வீட்டில் என்ன நடக்குது என்று கூட தெரியாமல் நான் ஜோடி நம்பர் ஒன் மற்றும் சில பல நிகழ்ச்சி தொல்லைகாட்சி நிகழ்ச்சியை பார்த்து மகிழுந்து கொண்டு இருந்து இருக்கறேன். என்னைய நினைச்சு எனக்கே கோவம் வந்தது.
என்ன வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கறேன் என்று என்னை பற்றி நினைக்கையில் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

என்னடா நீ எப்படி இருந்துகிட்டு சென்னை மேல பழி போடுறியானு நீங்க கேட்குறது எனக்கு புரியுது.